கண்ணனை மனத்தினால் நினைக்கலாமே !திருமாலை - 21
பணிவினால் மனம் அதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாய்த் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் !
அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?

[விளக்கம்]

மனமே ! பவளம் போன்ற வாயினை உடைய அரங்கனிடம் பணிவாக இருந்து, மிக்க தைர்யத்துடன் (வைராக்யத்துடன்) , அவனையே நினைத்து வாழ்ந்தால் என்ன? போகட்டும் ! ஸ்ரீரங்கத்தில் கண்ணன் படுத்து கிடக்கும் கோலத்தையாவது நீ நினைக்கலாம் அல்லவா?


[கூடுதல் விளக்கம்]
கோயில் எப்படி எனில் சிறந்த பொன்னாலான மலையை (மேரு மலையை ) ஒத்தது.
மணியனார் - மணியை அணிந்து இருக்கும் கிருஷ்ணன் (அல்லது) நீல மணியை ஒத்த கிருஷ்ணன்.


No comments: