கண்ணனை மனத்தினால் நினைக்கலாமே !



திருமாலை - 21
பணிவினால் மனம் அதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாய்த் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் !
அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?

[விளக்கம்]

மனமே ! பவளம் போன்ற வாயினை உடைய அரங்கனிடம் பணிவாக இருந்து, மிக்க தைர்யத்துடன் (வைராக்யத்துடன்) , அவனையே நினைத்து வாழ்ந்தால் என்ன? போகட்டும் ! ஸ்ரீரங்கத்தில் கண்ணன் படுத்து கிடக்கும் கோலத்தையாவது நீ நினைக்கலாம் அல்லவா?


[கூடுதல் விளக்கம்]
கோயில் எப்படி எனில் சிறந்த பொன்னாலான மலையை (மேரு மலையை ) ஒத்தது.
மணியனார் - மணியை அணிந்து இருக்கும் கிருஷ்ணன் (அல்லது) நீல மணியை ஒத்த கிருஷ்ணன்.


ஜகன்மோஹன வேணுகோபாலன் !


கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவில் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;
இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!
(பெரியாழ்வார்)

கிரிதாரியின் பெருமையை தினமும் கற்பேன் !

ஓடும் புள்ளேறி* சூடும் தண் துழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே.

அம்மானாய் பின்னும்* எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட* செம்மா கண்ணனே.

கண்ணாவான் என்றும்* மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட* விண்ணோர் வெற்பனே.

வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே*
நிற்கும் அம்மான் சீர்* கற்பன் வைகலே.

வைகலும் வெண்ணை* கைகலந்துண்டான்*
பொய் கலவாது* என் மெய் கலந்தானே.

கலந்து என்னாவி* நலங்கொள் நாதன்*
புலன் கொள் மாணாய்* நிலம் கொண்டானே.

கொண்டான் ஏழ்விடை* உண்டான் ஏழ்வையம்*
தண்தாமம் செய்து* என் எண் தான் ஆனானே.

ஆனான் ஆனாயன்* மீனோடு ஏனமும்*
தானானான் என்னில்* தானாய சங்கே*

சங்கு சக்கரம்* அங்கையில் கொண்டான்*
எங்கும் தானாய* நங்கள் நாதனே*

நாதன் ஞாலம்கொள்* பாதன் என்னம்மான்
ஓதம் போற்கிளர்* வேத நீரனே.

நீர்புரைவண்ணன்* சீர்ச்சடகோபன்*
நேர்தலாயிரத்து* ஓர்தல் இவையே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

இராமன் வசிக்கும் இடங்கள்

(Repost due to presence of too many labels.)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)

கேசவன் உள்ள இடங்கள்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான்* - எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான்* முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்.
(பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி)

தலைக்கு அணியாவது எது ?

ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறடர்ததும் மண் அளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிபே
ராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறுசெய் தொண்டர் சேவடி செழுஞ்சேறு என் சென்னிக்கு அணிவனே
(குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி )

First Post

Glory unto the Lord of Tiruallikeni !!
Glory unto the devotees of the Supreme !!