கிரிதாரியின் பெருமையை தினமும் கற்பேன் !

ஓடும் புள்ளேறி* சூடும் தண் துழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே.

அம்மானாய் பின்னும்* எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட* செம்மா கண்ணனே.

கண்ணாவான் என்றும்* மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட* விண்ணோர் வெற்பனே.

வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே*
நிற்கும் அம்மான் சீர்* கற்பன் வைகலே.

வைகலும் வெண்ணை* கைகலந்துண்டான்*
பொய் கலவாது* என் மெய் கலந்தானே.

கலந்து என்னாவி* நலங்கொள் நாதன்*
புலன் கொள் மாணாய்* நிலம் கொண்டானே.

கொண்டான் ஏழ்விடை* உண்டான் ஏழ்வையம்*
தண்தாமம் செய்து* என் எண் தான் ஆனானே.

ஆனான் ஆனாயன்* மீனோடு ஏனமும்*
தானானான் என்னில்* தானாய சங்கே*

சங்கு சக்கரம்* அங்கையில் கொண்டான்*
எங்கும் தானாய* நங்கள் நாதனே*

நாதன் ஞாலம்கொள்* பாதன் என்னம்மான்
ஓதம் போற்கிளர்* வேத நீரனே.

நீர்புரைவண்ணன்* சீர்ச்சடகோபன்*
நேர்தலாயிரத்து* ஓர்தல் இவையே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

5 comments:

Thilaga. S said...

very nice presentation..great work

Thilaga. S said...

'உயர்வற உயர்நலம் உடையவன்', 'யானொட்டி என்னுள் இருதுவமென்றிலன்', 'மறப்பும் ஞானமும்' போன்ற நம்மாழ்வாரின் பாடல்களையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்..

Radha said...

oh ! i am seeing these comments after an year..thanks a lot ! :-)

Krishnan said...

And now commenting after one more year. Thiruvaaimozhi is ocean of bliss. Continue your good work.

Krishnan said...

And now commenting after one more year. Thiruvaaimozhi is ocean of bliss. Continue your good work.