கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 3பெரியாழ்வார் திருமொழி - 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்
வந்து மண்ணும் மணமும் கொண்மின் *
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினில் புகுதல் ஒட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாளாக படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.


[விளக்கம்]
முறையான ( முழுமையான ) வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே, வாருங்கள் ! வந்து திருமண் (நாமம்) இட்டு கொள்ளுங்கள். திருமால் அணிந்த துளசி மாலையை சூடிக் கொள்ளுங்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையை ஆண்ட ராவணனின் ஆட்சி பாழ் ஆகும் படி யுத்தம் செய்த ராமனை போற்றுவோம் !

(சொற்பொருள்)
வாழ் - முறைமை; ஒழுக்கம்
இராக்கதர் - ராக்ஷஸர்
படை - ஆயுதம்
பொருதல் - வீசுதல்
ஆள் - ஆட்சி
பாழாளாக - பாழ் + ஆள் + ஆக
பாழாள் => ஆட்சி பாழ்படுதல்
ஆட்படுதல் - அடிமை ஆதல்
கூழ் - உணவு; பொருள்

No comments: