
அமலனாதிபிரான் - 6
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்*
அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை* முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்*
அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை* முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.
[விளக்கம்]
அழகான சிறகுகளை உடைய வண்டுகள் வாழும் பொழில்களால் சூழப்பெற்ற அரங்கம்; அங்கு வாசம் செய்யும் ரங்கநாதன், முன்பொரு சமயம் சிவபெருமானின் துன்பத்தைப் போக்கினான். உலகங்கள், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் அந்த அரங்கனே ப்ரளய காலத்தில் அனைத்தையும் தன் கண்டம் வழியாக உள்ளே விழுங்கி விடுகிறான். அரங்கனின் அந்தக் கண்டம் கொண்டுள்ள அதிசயமான அழகைப் பாருங்கள் ! அந்த அழகு இன்று என்னை அடிமை செய்து (உலக சிற்றின்பங்களில் என் மனம் சிக்காமல்) என்னைக் காப்பாற்றியது.
[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]
[சொற்பொருள்]
அம் - அழகிய
சிறை - சிறகு; இறக்கை
(அம் + சிறை = )அஞ்சிறை - அழகிய சிறகு
மாநிலம் - பெரிய பூமி
அண்டர் அண்டம் - வானோர் உலகம்
பகிரண்டம் - வெளி உலகம் ("பஹிர் அண்டஹ" வடமொழி ஆக்கத்தில் பகிரண்டம் ஆயிற்று)
எழுமால் வரை - ஏழு பெரிய மலைகள்
கண்டம் - கழுத்து
[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]
21 comments:
தெளிவாக விளக்கியிருக்கீங்க :) விளக்கத்தை சுருக்கமாகவும் வேணுங்கிறவ படிக்கிற மாதிரி விரிவாக தந்திருப்பது சிறப்பு. நன்றி ராதா.
//அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை* முற்றும்//
இந்த வரி ரொம்ப பிடிச்சது.
// இங்கு "அண்டர்" என்பது வானில் வாழ்பவரைக் குறிக்கும்//
Underன்னா கீழே வாழ்பவரைத் தானே குறிக்கும்? நீங்க மேலே-ன்னு சொல்றீங்க? :))
ஈசன் சிவபெருமான் கண்டத்தால் அண்டத்தைக் காத்தவன்! ஆலமுண்ட நீல கண்டன்!
அதான் போலும் ஆழ்வார், இங்கு அரங்கனின் கண்டத்தைப் பாடும் போது, ஈசனை நினைவு கொள்கிறார்!
விழுங்குதல் என்று வரும் போது, வாய்க்கும் வேலையில்லை! வயிற்றுக்கும் வேலையில்லை! தொண்டையாகிய கண்டம் தான் வாயில் இருந்து வாங்கி, வயிற்றுக்குத் தள்ளுகிறது! தொண்டையில் ஏதேனும் ஆகி விட்டால் அம்புட்டு தான்! :)
இப்படி அண்ட பகிரண்டங்களையும் வாய்க்குள் வாங்குவதை விட, வயிற்றுக்குள் தள்ளுவதை விட, தொண்டையில் இறங்குவது கடினமோ கடினம்! அதான் பல பாசுரங்களிலும், உலகேழும் உண்டவா என்று வரும் போது, கண்டம் உண்டவா காணீரே, என்று கண்டம்/கழுத்து/தொண்டையைப் பற்றியே பேசுகிறார்கள்!
இப்போ, கேள்வி ராதாவுக்கு :)
அரங்கன் கிட்ட வேண்டிக்கிட்டீங்களாமே போன பதிவுல, அதான் ஞாபகமா என்னைய கேக்கச் சொன்னான்! :)
அர சாப விமோசனம் என்பது எந்தத் தலம் ராதா?
திருக்கண்டியூர்-ன்னும் சொல்லி இருக்கீங்க! வைகுந்த விண்ணகரம் என்றும் காட்டி இருக்கீக? எந்தத் தலம்?
//தெளிவாக விளக்கியிருக்கீங்க :) விளக்கத்தை சுருக்கமாகவும் வேணுங்கிறவ படிக்கிற மாதிரி விரிவாக தந்திருப்பது சிறப்பு //
நன்றி அக்கா ! :) இந்த ஸ்டைல் பல பேர் பதிவுகளைப் பார்த்து, அவற்றில் இருந்து ஒவ்வொரு விஷயத்தை காப்பி அடிச்சி வந்தது. :)
விளக்கங்களும் முன்னோர் விளக்கங்களை காப்பி காப்பி அடிச்சி எழுதறது தான். :)
//Underன்னா கீழே வாழ்பவரைத் தானே குறிக்கும்? நீங்க மேலே-ன்னு சொல்றீங்க? :)) //
:))
//அர சாப விமோசனம் என்பது எந்தத் தலம் ராதா?
திருக்கண்டியூர்-ன்னும் சொல்லி இருக்கீங்க! வைகுந்த விண்ணகரம் என்றும் காட்டி இருக்கீக? எந்தத் தலம்? //
நல்ல கேள்வி. ஐந்து மதிபெண்கள். :-)
"ஹர சாப விமோசனர்" திருக்கண்டியூர் தான்.
கண்டியூர் பாசுரம் இட மறந்து விட்டேன்.
அதையும் பதிவில் சேர்க்க வேண்டும். நினைவு படுத்தியமைக்கு நன்றி. :-)
உடனே படிக்க வேண்டுமெனில்:
http://en.wikipedia.org/wiki/Sri_Hara_Saabha_Vimocchana_Perumal_Temple_(Thirukkandiyur)
Sorry...didn't copy-paste the links correctly.
http://en.wikipedia.org/wiki/Sri_Hara_Saabha_Vimocchana_Perumal_Temple_(Thirukkandiyur)
http://en.wikipedia.org/wiki/File:Thirukkandiyur_paasuram.JPG
//நல்ல கேள்வி. ஐந்து மதிபெண்கள். :-)//
பதிலுக்குத் தான் மதிப்பெண் கொடுப்பாய்ங்க! நீங்க கேள்விக்கே மதிப்பெண் கொடுக்கறீங்க! ராதா நெம்ப நல்லவரு! :))
ஆனா இன்னும் முழுக்கப் பதில் சொல்லலையே!
வைகுந்த விண்ணகரம் என்றும் ஆழ்வார் பாடுகிறாரே? ரெண்டு இடத்திலுமே சாப விமோசனமா?
//அவன்கண் சாபமது நீக்கும்
முதல்வன்;
அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே !//
ரங்கா! நீ சொன்னபடியே கேட்டுட்டேன்!
இந்த பதிவினை போலவே இனி வரும் பதிவுகள் அனைத்திலும் கண்ணபிரான் கேள்விகள் ஏதும் கேட்காம நல்ல பிள்ளையாய் இருக்க அருள் புரிவாய் ரங்கா :)
அடாடாடாடாடாடா !!
http://thiruvaikuntavinnagaram.blogspot.com/
வைகுண்ட விண்ணகர பெருமாளுக்கு இங்க திருமஞ்சனம் நடக்குது. முதல் வேலையா அதை பார்த்துட்டு வாங்க. அங்கேயே திருமங்கை மன்னன் வேற உங்களை வரவேற்க காத்துட்டு இருக்கார்.அவர்கிட்டயே பதில் கெடைக்கும். :-)
உங்கள் இருவரின் விளக்கங்களும் படித்து இன்புற்றேன். அருமை.
நன்றி குமரன். :)
இத்தனை நாளாய் வாராமல்போனதில் இழப்பு எனக்குத்தான் என்பதை இங்க வந்ததும் என்னரங்கனைப்பாத்ததும் புரிந்துகொண்டேன்...அமலனாதிபிரானுக்கு உங்களின் ஆழ்ந்த விளக்கம் அருமைமோஹன்!
இனி அடிக்’கடி ’ என் வரவு இருக்கும்:)
ஆஹா ! இவ்வளவு நாளாக அரங்கன் உங்கள் வரவிற்காக தான் அடுத்த பாசுரத்திற்கு போக விடாமல் என்னை நிறுத்தி வைத்திருந்தான் போல...:) வாரம் ஒன்று அல்லது இரண்டு பாசுரங்கள் இடுவதாக எண்ணம் அக்கா. தங்கள் வரவு நல் வரவு ஆகுக. :)
//வாரம் ஒன்று அல்லது இரண்டு பாசுரங்கள் இடுவதாக எண்ணம் அக்கா. //
இதைச் சொல்லி மாசக் கணக்குல்ல ஆவுது?
பொய் சொல்லக் கூடாது ராதா! அது கண்ணபிரானுக்கே உரியது! :)
செய்ய வாய் ஐயோ என்ற அடுத்த பாசுரம் எங்கே? எங்கே? எங்கே?
எங்கள் பள்ளியில் கற்றுக்கொடுத்த பாடல் இது.மீண்டும் வாசிக்க கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி..விளக்கமும் ஒவியமும் அற்புதமாக இருக்கிறது..
ராதா சார்!!
அரங்க நாதர் கழுத்து வரைக்கும் தரிசித்தோம். அடுக்கு மேல நமக்கு allow கிடையாது போல!
இப்படிக்கு
அடியார்க்கும் அடியேன்
பொடியேன்
ராஜேஷ் நாராயணன்
ராஜேஷ் சார் !
நம் கையில் என்ன உள்ளது? இது போன்ற காரியங்களில் எல்லாம் இறை அருள் இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். கண்ணன் மனம் வைக்க வேண்டுமே. எதையோ எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் வேறு எதையோ எழுதுகிறேன். "சரி தான். எழுதிய மட்டும் பதிவு செய்துவிடுவோம்" என்று நினைத்து பதிவு செய்துவிட்டு பார்த்தால் "அட ! இது பாசுரங்கள் வலைப்பூவே இல்லையே !" என்று தெரிய வருகிறது. :)
கடந்த மூன்று வாரங்களாக கண்ணன் பாட்டில் பதிவுகள் இட்டு வருகிறேன். அங்கு வாருங்கள். :)
//எங்கள் பள்ளியில் கற்றுக்கொடுத்த பாடல் இது.மீண்டும் வாசிக்க கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி..விளக்கமும் ஒவியமும் அற்புதமாக இருக்கிறது..//
நன்றி திலகாம்மா ! பாசுரம் குறித்த தங்கள் மகிழ்ச்சியை கண்டு அரங்கனுக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். :)
ok radha sir,
... iam not sir .. iam small boy
adiyaarkum adiyen
rajesh narayanan
arangan arulvanaaga!
arangan arulvanaaga!
arangan arulvanaaga!
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.தொடருங்களேன்.
Post a Comment