Showing posts with label திருவாய்மொழி. Show all posts
Showing posts with label திருவாய்மொழி. Show all posts

கிரிதாரியின் பெருமையை தினமும் கற்பேன் !

ஓடும் புள்ளேறி* சூடும் தண் துழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே.

அம்மானாய் பின்னும்* எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட* செம்மா கண்ணனே.

கண்ணாவான் என்றும்* மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட* விண்ணோர் வெற்பனே.

வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே*
நிற்கும் அம்மான் சீர்* கற்பன் வைகலே.

வைகலும் வெண்ணை* கைகலந்துண்டான்*
பொய் கலவாது* என் மெய் கலந்தானே.

கலந்து என்னாவி* நலங்கொள் நாதன்*
புலன் கொள் மாணாய்* நிலம் கொண்டானே.

கொண்டான் ஏழ்விடை* உண்டான் ஏழ்வையம்*
தண்தாமம் செய்து* என் எண் தான் ஆனானே.

ஆனான் ஆனாயன்* மீனோடு ஏனமும்*
தானானான் என்னில்* தானாய சங்கே*

சங்கு சக்கரம்* அங்கையில் கொண்டான்*
எங்கும் தானாய* நங்கள் நாதனே*

நாதன் ஞாலம்கொள்* பாதன் என்னம்மான்
ஓதம் போற்கிளர்* வேத நீரனே.

நீர்புரைவண்ணன்* சீர்ச்சடகோபன்*
நேர்தலாயிரத்து* ஓர்தல் இவையே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)